» சினிமா » திரை விமர்சனம்

விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன்!

சனி 3, ஆகஸ்ட் 2024 4:00:19 PM (IST)



விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’மழை பிடிக்காத மனிதன்’. 

ராணுவ உளவு பிரிவில் அதிகாரியாக இருக்கும் விஜய் ஆண்டனி பாலியல் அட்டூழியம் செய்யும் அமைச்சரின் மகனை கொலை செய்கிறார். இதனால் அமைச்சர் மூலம் அவருக்கு ஆபத்து வருகிறது. விஜய் ஆண்டனியை காப்பாற்றும் நோக்கோடு அவர் இறந்து விட்டதாக அறிவித்து ரகசியமாக அந்தமானுக்கு அனுப்பி வைக்கிறார் சக அதிகாரி சரத்குமார்.

அந்தமானில் அநியாய வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கும் வில்லனால் பல அப்பாவி குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. அந்த வில்லனை விஜய் ஆண்டனி எதிர்க்கிறார். இதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பது மீதி கதை.விஜய் ஆண்டனி தன்னுடைய ரோலில் அமைதியாக அலட்டல் இல்லாமல் வருகிறார். காதலியை இழந்த துக்கத்தை கண்களால் கடத்துவது, எதிரிகளிடம் தன்னை மறைத்துக் கொள்வது, வில்லன்களை நையபுடைப்பது என கதாபாத்திரத்தில் நியாயம் செய்துள்ளார்.

சரத்குமார் சிறிது நேரம் வந்தாலும் கம்பீர நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.சத்யராஜ் ஓரிரு காட்சிகள் வந்து தன் ஆளுமையை காண்பித்து உள்ளார்.மேகா ஆகாஷ் மெல்லிய காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவது, போலீஸ் அதிகாரியிடம் அலட்சியமாக பேசுவது என கதாபாத்திரத்தில் நிறைவு.வில்லனாக வரும் தனஞ்செயா, போலீஸ் அதிகாரி முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், ஏ.எல்.அழகப்பான், பிருத்வி அம்பார், உள்பட அனைவரும் கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளனர்.

விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது.அந்தமானின் அழகை அங்குலம் அங்குலமாக அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.விஜய் ஆண்டனியின் பின்னணி கதையை விரிவாக சொல்லாதது பலவீனம்.கெட்டவனை விட கெட்டது அழியணும் என்ற ஒரு வரி கதையை கையில் எடுத்துக் கொண்டு காட்சிக்கு காட்சி திருப்பங்களோடும் சுவாரசியத்தோடும் ரசிக்கும்படியாக கொடுத்துள்ளார் இயக்குனர் விஜய் மில்டன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education





Thoothukudi Business Directory