» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மில்லர் - அக்சர் அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி!
செவ்வாய் 12, மே 2026 12:22:26 PM (IST)
தர்மசாலாவில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. கேப்டன் அக்சர் படேல் மற்றும் மில்லரின் அதிரடி ஆட்டம் டெல்லியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 56 ரன்கள் (2 பவுண்டரி, 6 சிக்ஸர்) குவித்தார். ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே அவர் சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடங்கினார்.
நடுவரிசையில் ஷ்ரேயஸ் ஐயர் பொறுப்பாக விளையாடி 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டத்தின் 19-வது ஓவரில் ஸ்டார்க் அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டாய்னிஸ் மற்றும் சஷாங்க் சிங்கை அவுட்டாக்கினார். இருப்பினும் சூர்யான்ஷ் ஷெட்கேவின் அதிரடியால் ஸ்டார்க்கின் ஹாட்ரிக் கனவு தகர்ந்தது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது.
211 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, 9 ஓவர்களில் 76 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அபிஷேக் போரல், ராகுல், ஸ்டப்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இக்கட்டான நிலையில் களம் புகுந்த கேப்டன் அக்சர் படேல், 30 பந்துகளில் 56 ரன்கள் விளாசி அணியை மீட்டெடுத்தார்.அவருக்குத் துணையாக ஆடிய 'கில்லர்' மில்லர் 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் அஷுதோஷ் சர்மா (24), மாதவ் திவாரி (18*) மற்றும் அகிப் நபி (10*) ஆகியோர் அதிரடி காட்ட, டெல்லி அணி 19 ஓவர்களிலேயே 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பவர்பிளேவுக்குள் (முதல் 6 ஓவர்) 3 முறை 50+ ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பிரியான்ஷ் ஆர்யா பெற்றார். முதலிடத்தில் வைபவ் சூர்யவன்ஷி (4 முறை) உள்ளார். ஆட்டத்தின் முதல் பந்திலேயே 3-வது முறையாக சிக்ஸர் அடித்து, ஜெய்ஸ்வாலுக்கு (4 முறை) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிரியான்ஷ் பிடித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அறிமுக போட்டியிலேயே அசத்திய மானவ் சுதர்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி
செவ்வாய் 9, ஜூன் 2026 8:25:54 AM (IST)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: கே.எல்.ராகுல், சுப்மன் கில் அதிரடி சதம்!
சனி 6, ஜூன் 2026 5:26:51 PM (IST)

இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்தார் சூர்யவன்ஷி : சச்சின் சாதனை முறியடிப்பு!
சனி 6, ஜூன் 2026 4:47:09 PM (IST)

இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம் ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!
சனி 6, ஜூன் 2026 4:41:43 PM (IST)

சர்வதேச தரவரிசை: மீண்டும் டாப் 10 இடத்துக்கு முன்னேறிய பி.வி. சிந்து
வியாழன் 4, ஜூன் 2026 8:14:14 PM (IST)

ஐபிஎல் 2026 சாம்பியன்: குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையைத் தக்கவைத்த ஆர்சிபி அணி!
திங்கள் 1, ஜூன் 2026 12:32:33 PM (IST)









