» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு!

புதன் 26, நவம்பர் 2025 11:53:24 AM (IST)

10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பைக்கான போட்டி அட்டவணை மும்பையில் அறிவிக்கப்பட்டது. 

முதல் சுற்றுக்கான முழுமையான குழுக்கள் பின்வருமாறு:

குரூப் ஏ: இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா

குரூப் பி: இலங்கை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன்

குரூப் சி: இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், நேபாளம், இத்தாலி

குரூப் டி: நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ம்தேதி கொழும்பில் மோதுகின்றன.

இரு அணிகளும் சமீபத்தில் ஆசிய கோப்பை போட்டியில் மோதின. துபாயில் 3 முறை மோதிய ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது. இந்த தொடரின் போது பகல்காம் சம்பவம் எதிரொலித்தது. இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தது. பாகிஸ்தான் மந்திரியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்தது போன்றவற்றால் சர்ச்சை வெடித்தது.

அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையிலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7-ம்தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ம்தேதி டெல்லியிலும், கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ம்தேதி அகமதாபாத்திலும் மோதுகிறது.

இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் மற்றொரு பிரிவிலும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்க தேசம், நேபாளம், இத்தாலி இன்னொரு பிரிவிலும் இடம் பெறுகின்றன. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள் இன்னொரு பிரிவிலும் இடம்பெறுகின்றன.

இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றால் அகமதாபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறும். அரை இறுதிக்கு முன்னேறினால் மும்பையில் நடைபெறும். மற்றொரு அரை இறுதி கொழும்பு அல்லது கொல்கத்தாவில் நடைபெறும்.

இலங்கை, பாகிஸ்தான் அணிகளின் தகுதியை பொறுத்து இடங்கள் முடிவாகும். இறுதி போட்டி அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது. ஒரு வேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் போட்டி நடைபெறும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory