» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆஸி சென்றடைந்த இந்திய டி20 அணி வீரர்கள்!
வெள்ளி 24, அக்டோபர் 2025 3:30:19 PM (IST)
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்தது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும், அக்.29ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் டி20 தொடரில் பங்கேற்பதற்காக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ், பும்ரா, திலக் வர்மா , ஷிவம் துபே, துருவ் ஜூரல், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோர் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளனர்.
டி20 தொடர் அட்டவணை
அக்.29ம் தேதி முதல் டி20 போட்டி
அக். 31ம் தேதி 2வது டி20 போட்டி
நவ.2ம் தேதி 3வது டி20 போட்டி
நவ.6ம் தேதி 4வது டி20 போட்டி
நவ.8ம் தேதி 5வது டி20 போட்டி
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அறிமுக போட்டியிலேயே அசத்திய மானவ் சுதர்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி
செவ்வாய் 9, ஜூன் 2026 8:25:54 AM (IST)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: கே.எல்.ராகுல், சுப்மன் கில் அதிரடி சதம்!
சனி 6, ஜூன் 2026 5:26:51 PM (IST)

இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்தார் சூர்யவன்ஷி : சச்சின் சாதனை முறியடிப்பு!
சனி 6, ஜூன் 2026 4:47:09 PM (IST)

இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம் ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!
சனி 6, ஜூன் 2026 4:41:43 PM (IST)

சர்வதேச தரவரிசை: மீண்டும் டாப் 10 இடத்துக்கு முன்னேறிய பி.வி. சிந்து
வியாழன் 4, ஜூன் 2026 8:14:14 PM (IST)

ஐபிஎல் 2026 சாம்பியன்: குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையைத் தக்கவைத்த ஆர்சிபி அணி!
திங்கள் 1, ஜூன் 2026 12:32:33 PM (IST)









