» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய கோப்பை டி.20 தொடர்: இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் பயணம்

புதன் 3, செப்டம்பர் 2025 5:37:17 PM (IST)

ஆசிய கோப்பை டி.20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் செல்ல உள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் டி.20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது.  இதில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குதகுதி பெறும்.லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 10ம் தேதி யுஏஇ, 14ம் தேதி பரம எதிரி பாகிஸ்தான், 19ம் தேதி அணியுடன் மோதும்.

இந்த போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. இந்த தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பும்ரா 14 மாதங்களுக்கு பின் சர்வதேச டி.20யில் களம் இறங்க உள்ளார். இதனிடையே இந்திய அணி நாளை மும்பையில் இருந்து துபாய் செல்ல உள்ளது. இதனிடையே குடல் தசை பிடிப்பிற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 சதவீதம் உடற்தகுதியுடன் களம் இறங்க தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory