» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய பெண்கள் அணி!

வியாழன் 24, ஜூலை 2025 10:20:59 AM (IST)

ஹர்மன் ப்ரீத் கவுர் சதம் மற்றும் கிராந்தி குவுட் 6 விக்கெட் வீழ்த்தி அசத்த, இங்கிலாந்து அணிக்கு எதிரான, ஒரு நாள் தொடரை வென்று அசத்தியுள்ளது இந்திய பெண்கள் அணி. 

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. முதலில் டி20 தொடரை 3-2 என இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. இதனைத் தொடர்ந்து நடந்த ஒரு நாள் போட்டியில், முதல் இரண்டு போட்டிகள் முடிவில்1-1 என சமநிலை வகித்தது. 

தொடரை வெல்வது யார் என நிர்மாணிக்கும் மூன்றாவது போட்டியில், இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்தது. பிராத்திகா ராவல் (26), ஷ்மிருத்தி மந்தானா (45) சுமாரான துவக்கம் தந்தனர். ஹர்லின் தியோல் (45) சற்று ஆறுதல் அளித்தார். ஹர்மன் ப்ரீத் கவுர் (102) அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவருக்கு துணை நின்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் (50) அரை சதம் விளாசினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய பெண்கள் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. 

கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து பெண்கள் அணி, 49.5 ஓவரில் 305 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய வீராங்கனை கிராந்தி குவுட் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் தொடரை, 2-1 என்ற கணக்கில், இந்திய பெண்கள் அணி வென்று சரித்திர சாதனை படைத்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory