» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைப்பு..?

வியாழன் 26, ஜூன் 2025 5:36:32 PM (IST)



கிரிக்கெட் வீரர்  ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது நிச்சயம் கடந்த 8-ம் தேதி லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

இதில் பல உறவினர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் என 300 பேர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இவர்களது திருமணத்தை வருகிற நவம்பர் 19-ம் தேதி வாரணாசியில் உள்ள தாஜ் ஓட்டலில் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

2024 பொதுத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் மச்லிஷஹர் தொகுதியில் வெற்றி பெற்ற பிரியா, முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். வாரணாசியில் உள்ள கார்கியான் கிராமத்தைச் சேர்ந்த பிரியா சரோஜ், பல ஆண்டுகளாக சமாஜ்வாடி கட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

2022 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தந்தையின் பிரச்சாரத்தின் போது அவர் முதன்முதலில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டமும், நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்களது திருமணம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரிங்கு சிங்கிற்கு அரசுப்பணி...!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். இந்திய அணியின் சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தியதன் மூலம் இந்தியாவுக்கு அறிமுகம் ஆனார். இந்திய அணியிலும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார்.

இந்நிலையில் விளையாட்டு துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக அவருக்கு உத்தரபிரதேச அரசின் மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரி பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.விளையாட்டு துறையில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களை அங்கீகரிக்கும் உத்தரபிரதேச அரசின் திட்டத்தில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory