» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஜெய்ஸ்வால் சதம், ஷுப்மன் கில் அரைசதம்: இந்தியா வலுவான தொடக்கம்!
சனி 21, ஜூன் 2025 8:49:38 AM (IST)

ஜெய்ஸ்வால் சதம், ஷுப்மன் கில் சதம் அடித்து அசத்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான தொடக்கத்தைத் தந்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் இன்று (ஜூன் 20) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்திய அணி 91 ரன்களுக்கு முதல் விக்கெட்டினை இழந்தது. கே.எல்.ராகுல் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின், அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து, ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி இருவரும் வேகமாக ரன்கள் குவித்தனர். சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 150 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். அதில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மறுமுனையில் கேப்டன் ஷுப்மன் கில் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில்லின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.
லீட்ஸ் மைதானத்தில் விஜய் மஞ்ச்ரேக்கர், பட்டோடி, வெங்சர்க்கார், ராகுல் டிராவிட், கங்குலி, சச்சின் தெண்டுல்கர் ஆகியோருக்கு பிறகு சதம் அடித்த இந்திய வீரராக சாதனை பட்டியலில் ஜெய்ஸ்வால் (101 ரன்) இணைந்துள்ளார். மேலும் லீட்சில் சதம் விளாசிய முதல் இந்திய தொடக்க வீரர் இவர் தான்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)

சையத் முஷ்டாக் அலி கோப்பை: சாய் சுதர்சன் அதிரடி சதம்: தமிழக அணி ஆறுதல் வெற்றி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:35:16 PM (IST)

ஜெய்ஸ்வால் அபார சதம் : தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:02:16 AM (IST)

ருதுராஜ், கோலி சதம் வீண் : 359 ரன்களை வெற்றிகரமாக விரட்டிய தென் ஆப்பிரிக்கா!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:47:32 AM (IST)










