» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:37:18 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், பேரிடர் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் விதி 197-ன் கீழ் கவன ஈர்ப்பு அறிவிப்பை அளித்து, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சரிடம் அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.கன்னியாகுமரி கடலோர கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன. கடல் சீற்றம், புயல் மற்றும் கடலோர அரிப்பு ஆகியவற்றால் வீடுகள், சாலைகள் மற்றும் மீன்பிடி கட்டமைப்புகள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.
ரூ.1,000 கோடி நிதித் தொகுப்பில் மேற்கொள்ள வேண்டிய முக்கியப் பணிகள்:
கடலோரப் பாதுகாப்பு: அரிப்பைத் தடுக்க தேவையான இடங்களில் தூண்டில் வளைவுகள், கடல் தடுப்புச் சுவர்கள் அமைத்தல்.
அடிப்படை உள்கட்டமைப்பு: அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற சாலைகள், பாதுகாப்பான குடிநீர் வசதி மற்றும் மீன்பிடி இறங்குதளங்களை உருவாக்குதல்.
பேரிடர் மேலாண்மை: புயல் பாதுகாப்பு மையங்கள், பேரிடரைத் தாங்கும் வீடுகள் மற்றும் அவசரகால வெளியேற்றப் பாதைகளை அமைத்தல்.
ஹெலிபேட் மீட்பு வசதி: கடலில் ஆபத்தில் சிக்கும் மீனவர்களை விரைவாக மீட்க, இந்திய கடலோரக் காவல்படை மற்றும் கடற்படையுடன் ஒருங்கிணைந்து பிரத்யேக 'ஹெலிபேட்' அவசரகால மீட்பு வசதியை ஏற்படுத்துதல்.
சேமிப்பு கிடங்குகள்: மீன்கள் பாழாகாமல் இருக்கக் குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் பனிக்கட்டி உற்பத்தி மையங்களை நிறுவுதல்.
இயற்கைப் பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் கன்னியாகுமரி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதி செய்ய இச்சிறப்புத் தொகுப்பை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கேட்டுக்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:06:13 PM (IST)

கேஸ் சிலிண்டர் முன்பதிவு: இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீடிப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:55:24 PM (IST)

காதல் விவகாரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; பெண்ணின் தந்தை, தம்பி கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:53:09 PM (IST)

கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆராய்வதா? தலைமைச் செயலாளரை பதவி நீக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 11:36:01 AM (IST)

ஆசிரியர்கள் கண்டித்ததால் +1 மாணவர் தற்கொலை: மாணவர்கள் வகுப்புறக்கணிப்பு - சாலை மறியல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:57:34 AM (IST)

ரயில் சூட்கேஸில் எலும்புக்கூடு வழக்கு: ஒடிசா பெண் படுகொலை? - வடமாநில தம்பதிக்கு வலை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:52:27 AM (IST)








