» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்: ஆட்சியர் பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:03:00 PM (IST)

போதை பழக்கத்திற்கு ஆளான பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதிய மாணவர்களைத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் சந்தித்துப் பாராட்டினார்.
முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் பார்வையிட்டு, மாணவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாகப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1,485 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2.80 லட்சம் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, போதைப் பழக்கத்திற்கு ஆளான பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு அப்பழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்து 25,000 மாணவர்கள் கடிதம் எழுதி அனுப்பும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
"உங்களது உடல்நலமும், எங்களது எதிர்காலமும் முக்கியம்; போதைப் பழக்கத்தைக் கைவிட்டு எங்களுக்காக நலமுடன் வாழுங்கள்” என்ற உணர்வுடன் மாணவர்கள் எழுதிய அக்கடிதங்களைத் தபால் மூலம் அனுப்பும் நிகழ்வை ஆட்சியர் பார்வையிட்டார். போதைப் பழக்கத்தால் ஏற்படும் உடல்நலம் மற்றும் குடும்பப் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளிக்கும் மனப்பான்மையை உருவாக்கவுமே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) மற்றும் முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மோசஸ், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:06:13 PM (IST)

கேஸ் சிலிண்டர் முன்பதிவு: இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீடிப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:55:24 PM (IST)

காதல் விவகாரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; பெண்ணின் தந்தை, தம்பி கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:53:09 PM (IST)

கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆராய்வதா? தலைமைச் செயலாளரை பதவி நீக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 11:36:01 AM (IST)

ஆசிரியர்கள் கண்டித்ததால் +1 மாணவர் தற்கொலை: மாணவர்கள் வகுப்புறக்கணிப்பு - சாலை மறியல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:57:34 AM (IST)

ரயில் சூட்கேஸில் எலும்புக்கூடு வழக்கு: ஒடிசா பெண் படுகொலை? - வடமாநில தம்பதிக்கு வலை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:52:27 AM (IST)








