» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அங்கன்வாடி முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு : டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
புதன் 22, ஜூலை 2026 4:42:01 PM (IST)
மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும் அமைச்சர்களும், அதனைப் புறந்தள்ளிவிட்டுத் திரைப்படப் பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக்கேடானது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: "தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில், இதுபோன்ற அழுகிய நிலையிலான முட்டைகள் வழங்கப்பட்டிருப்பது குழந்தைகளின் உடல்நலனையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது."
மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும் அமைச்சர்களும், முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்து வெளிவரவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கண்டுகளிக்க ஆர்வம் காட்டுவதும், அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதுமே வாடிக்கையாக உள்ளது. மக்கள் பணியைப் புறந்தள்ளி ரசிகர் மன்ற நிர்வாகிகளைப் போலச் செயல்படுவது வெட்கக்கேடானது."
"எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உள்ளிட்ட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனச் சமூக நலத்துறையையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன்." என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)

அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்... இனி அன்புமணிதான் எல்லாம்: ராமதாஸ் அறிவிப்பு!
சனி 25, ஜூலை 2026 4:58:54 PM (IST)

சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!
சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மீண்டும் இடமாற்றமா? – அரசு தீவிர ஆலோசனை!
சனி 25, ஜூலை 2026 11:44:43 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? – அன்புமணி கண்டனம்!
சனி 25, ஜூலை 2026 11:25:26 AM (IST)








