» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி: முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!
புதன் 13, மே 2026 12:20:56 PM (IST)

அரசியலில் மாற்றம் என்று கூறிவிட்டு 'புஷ்பா' பட பாணியில் சோபா ஆட்சியை விஜய் நடத்திக்கொண்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தவெக-வின் வெற்றி குறித்துப் பேசிய உதயநிதி, "இந்த ஆட்சி அமையப் பெரும்பான்மை மக்கள் வாக்களிக்கவில்லை. 65 சதவீத மக்கள் உங்களுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற்றுத்தான் நீங்கள் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளீர்கள். குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தவிர்க்கவே அவர்கள் உங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்" எனச் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட பாணியைக் குறிப்பிட்ட உதயநிதி, "முதலமைச்சர் எங்குச் சென்றாலும் அவருடன் ஒரு பிரத்யேக சோபா செல்கிறது. 'புஷ்பா' பட பாணியில் சோபா ஆட்சியை விஜய் நடத்திக்கொண்டிருக்கிறார். அரசியலில் மாற்றம் என்று கூறிவிட்டு வந்த நீங்கள், தற்போது 'பரிமாற்றம்' (குதிரை பேரம்) மூலம் ஆட்சியைத் தக்கவைக்க முயல்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் பிரசாரத்தின்போது 'ஊழல் சக்தி' என்று யாரை விமர்சித்தீர்களோ, அவர்களுடனேயே (அதிமுக அதிருப்தி குழு) தற்போது கைகோர்த்துள்ளீர்கள். இது என்ன மாதிரியான அரசியல்? மேலும், 'மற்றும் சிலர்' எனக் கிண்டல் செய்த கட்சிகளின் ஆதரவில்தான் இன்று உங்கள் ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது எனச் சாடினார்.
"முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் போன்ற திட்டங்களுக்கான நிதி இன்னும் பயனர்களுக்குச் சென்று சேரவில்லை. அதை உடனடியாக வரவு வைக்க வேண்டும். நீங்கள் கொடுத்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றுவீர்கள் என மக்கள் நம்புகிறார்கள்" என்றும் அவர் பேசினார்.
இந்தக் காரசாரமான உரையைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்த உதயநிதி ஸ்டாலின், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் சென்சஸ் : நெல்லையில் பயிற்சி தொடக்கம்!
திங்கள் 25, மே 2026 12:54:24 PM (IST)

குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையே ஒரே தீர்வு: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
திங்கள் 25, மே 2026 12:37:56 PM (IST)

சூலூர் கொடூரம்..: அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய் ஆறுதல்!
திங்கள் 25, மே 2026 11:39:46 AM (IST)

எரிபொருள் விலை புதிய வரலாற்று உச்சம்: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!
திங்கள் 25, மே 2026 11:22:10 AM (IST)

மோதிரமலை பகுதியில் பாலம் கட்டும் பணி தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
திங்கள் 25, மே 2026 10:29:28 AM (IST)

பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியா? தவெக அரசு மீது இபிஎஸ் சாடல்!
ஞாயிறு 24, மே 2026 9:03:21 PM (IST)










