» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாளை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார் விஜய்: 9 அமைச்சர்களும் பதவியேற்பு!

சனி 9, மே 2026 7:56:19 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நீடித்த அரசியல் இழுபறிகள் ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் நாளை (மே 10) பதவியேற்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் போதிய ஆதரவு கிடைக்காமல் தவெக திணறி வந்த நிலையில், கடைசி நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. இதன் மூலம் தவெக-வின் பலம் 120 ஆக உயர்ந்தது.

இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், ஆளுநர் அர்லேகர் கேரளா செல்லவிருந்ததால் முதலில் நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் பாதியிலேயே விஜய் வீடு திரும்பிய சம்பவம் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், ஆளுநரின் கேரள பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மாலை 6:30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது, தவெக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் சமர்ப்பித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நாளை முதலமைச்சராக விஜய் பதவியேற்பார். அவருடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து, குறுகிய காலத்திலேயே ஆட்சிக் கட்டிலில் அமரவுள்ள விஜய்யின் பதவியேற்பு விழாவைக் காணத் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் சென்னையில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory