» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 படி உள்ளக புகார்குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு ரூ.50,000/- வரை அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 தீவிரமாக செயல்படுத்தும் பொருட்டு 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார்குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழுவில் குறைந்த பட்சம் 4 உறுப்பினர்களும் குழு தலைவர் அந்நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த பெண் பணியாளராகவும், குழுவில் உள்ள உறுப்பினர்களில் 50% மேல் பெண்களாகவும், ஒரு உறுப்பினர் தன்னார்வு தொண்டு நிறுவனத்திலிருந்து மகளிர் நலம்/மகளிர் பிரச்சனைகளை பற்றிய அக்கறையும் சட்டத்தை பற்றிய அறிவுப்பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
மாவட்டத்தில் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், தொழிற்சாலைகள் உள்ளக புகார்குழு அமைத்து அதன் விவரமும் மற்றும் ஏற்கனவே குழு அமைத்தவர்கள் அதற்க்கான ஆண்டறிக்கையை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக மணிமுத்தாறு வளாகத்தில் இயங்கும் மாவட்ட சமூகநல அலுவலகத்திலோ 31-05-2026 க்குள் சமர்பிக்கப்பட வேண்டும்.
மேலும் மத்திய அரசு வலைதளமான http://shebox.wcd.gov.in என்ற வலைதளத்தில் அனைத்து தனியார் நிறுவனங்களும் பதிவிடுதல் வேண்டும். மேலும் உள்ளக புகார்குழு அமைப்பது குறித்த தகவல்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். புகார்குழு அமைத்து அறிக்கை சமர்பிக்காத நிறுவனங்களுக்கு ரூ.50,000/- வரை அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

சேலத்தில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் அதிரடி கைது!
சனி 13, ஜூன் 2026 12:22:44 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)

புகையிலைக்கு நாடு முழுவதும் முழுமையான தடை : மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 13, ஜூன் 2026 10:32:37 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: 7 நாளில் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 5:26:53 PM (IST)









