» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுகவாக இருந்தால் இந்நேரம்.. பாஜகவை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? ஷாநவாஸ் கேள்வி!
வியாழன் 7, மே 2026 5:09:50 PM (IST)

ஆட்சி அமைக்க விடாமல் ஆளுநர் இடையூறு செய்கிறார். ஆனால், இதனை வெளிப்படையாகக் கண்டிக்கத் தவெக அஞ்சுகிறது என்று ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உருவெடுத்தும், ஆட்சி அமைக்க ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி விசிக முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில் குறிப்பிட்டுள்ள முக்கியக் கருத்துக்கள்: தனிப்பெரும் கட்சியாகத் தவெக வெற்றி பெற்ற பிறகும், ஆட்சி அமைக்க விடாமல் ஆளுநர் இடையூறு செய்கிறார். ஆனால், இதனை வெளிப்படையாகக் கண்டிக்கத் தவெக அஞ்சுகிறது.
ஒருவேளை இதே 108 இடங்களைப் பெற்று திமுக இத்தகைய சூழலை எதிர்கொண்டிருந்தால், சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஏற்பட்டது போன்ற கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது நேரடியாக பாஜகவை எதிர்ப்பதாகும். அத்தகைய எதிர்ப்பைத் தெரிவிக்கத் தேவையான கொள்கை உறுதியும், துணிவும் விஜய்யிடம் உள்ளதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை நிரூபிக்கத் தவெக திணறி வரும் நிலையில், ஆளுநர் மாளிகையின் நிபந்தனைகளைத் தவெக மென்மையாகக் கையாண்டு வருவதையே ஆளூர் ஷாநவாஸ் இவ்வாறு விமர்சித்துள்ளார். பாஜகவை எதிர்ப்பதில் தவெக-வின் நிலைப்பாடு என்ன என்பதை இந்த ஆளுநர் விவகாரம் வெளிச்சம் போட்டுக் காட்டும் என்றும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் : 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு
புதன் 10, ஜூன் 2026 11:42:13 AM (IST)

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார் - முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி!
புதன் 10, ஜூன் 2026 10:08:42 AM (IST)

நெல்லையில் காதலைக் கைவிட மறுத்த அக்கா சரமாரி வெட்டிக்கொலை: தம்பி வெறிச்செயல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:02:04 PM (IST)

த.வெ.க. அரசு சிறப்பாகவே உள்ளது, மின்வெட்டுப் பிரச்சினைக்கு திமுகவே காரணம்: அன்புமணி பேட்டி
செவ்வாய் 9, ஜூன் 2026 3:48:27 PM (IST)

மத்திய அரசு தமிழகத்திற்கான ரூ.1,000 கோடி நிதி விடுவித்துள்ளது: செங்கோட்டையன்
செவ்வாய் 9, ஜூன் 2026 3:34:14 PM (IST)

தமிழகத்தில் மின்வெட்டை ஏற்படுத்தச் சிலர் சதி செய்கின்றனர்: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:52:39 PM (IST)









