» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வு : ஸ்ரீதர் வேம்பு அதிரடி கருத்து!
வியாழன் 7, மே 2026 4:13:57 PM (IST)
தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தற்போதைய அரசியல் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப் புதிய தேர்தலை நடத்துவதே ஒரே தீர்வு என ஜோஹோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் யாருக்கும் கிடைக்காத சூழலில், தற்போது அமையும் எந்தவொரு அரசும் அழுத்தங்கள் மற்றும் இழுபறிகளால் நிலையற்றதாகவே இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தில் தற்காலிகமாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திவிட்டு, புதிய தேர்தலை நடத்துவதே சிறந்தது. குறிப்பாக, "வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுத்து", மிகக் கடுமையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் தேர்தல் நடந்தால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவார் என்று தான் கருதுவதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். விஜய் மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும் எனில், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போராடட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும். ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை, இது அக்கட்சிக்கு ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்று அவர் கூறியுள்ளார். "மக்கள் புதிதாகத் தீர்மானிக்கட்டும்" என்று கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு, உண்மையான மக்கள் தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருக்கிறது என்பதைப் பார்க்க இதுவே சரியான நேரம் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் வேளையில், ஒரு தொழிலதிபரான ஸ்ரீதர் வேம்புவின் இந்த அரசியல் கணிப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் : 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு
புதன் 10, ஜூன் 2026 11:42:13 AM (IST)

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார் - முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி!
புதன் 10, ஜூன் 2026 10:08:42 AM (IST)

நெல்லையில் காதலைக் கைவிட மறுத்த அக்கா சரமாரி வெட்டிக்கொலை: தம்பி வெறிச்செயல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:02:04 PM (IST)

த.வெ.க. அரசு சிறப்பாகவே உள்ளது, மின்வெட்டுப் பிரச்சினைக்கு திமுகவே காரணம்: அன்புமணி பேட்டி
செவ்வாய் 9, ஜூன் 2026 3:48:27 PM (IST)

மத்திய அரசு தமிழகத்திற்கான ரூ.1,000 கோடி நிதி விடுவித்துள்ளது: செங்கோட்டையன்
செவ்வாய் 9, ஜூன் 2026 3:34:14 PM (IST)

தமிழகத்தில் மின்வெட்டை ஏற்படுத்தச் சிலர் சதி செய்கின்றனர்: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:52:39 PM (IST)









