» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி கடலில் அமெரிக்க வாழ் சகோதரிகள் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை

வெள்ளி 1, மே 2026 8:53:57 AM (IST)

கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வந்த அமெரிக்க வாழ் கேரள சகோதரிகள் இருவர், வாவத்துறை கடலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் கிடங்கூர் பகுதியைச் சேர்ந்த பிலிப் - மேரி தம்பதியினரின் மகள்கள் ஆனி பிலிப் (35) மற்றும் மீரா பிலிப் (32). ஆனி பிலிப் எக்ஸ்ரே டெக்னீஷியனாகவும், மீரா பிலிப் பொறியாளராகவும் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வந்தனர். விடுமுறைக்காகத் தமிழகம் வந்த இவர்கள், ராமேஸ்வரம் மற்றும் மதுரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு கடந்த 26-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வந்து விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.

கடந்த 27-ஆம் தேதி விடுதியிலிருந்து வெளியே சென்ற சகோதரிகள் இருவரும் மீண்டும் திரும்பவில்லை. இது குறித்து அவர்களது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்று காலை வாவத்துறை தூண்டில் வளைவு பகுதியில் இரண்டு பெண்களின் உடல்கள் மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. 

கடலோரப் பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார், உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தவர்கள் மாயமான சகோதரிகள் ஆனி பிலிப் மற்றும் மீரா பிலிப் என்பது உறுதி செய்யப்பட்டது. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தார்களா அல்லது தற்கொலை செய்துகொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory