» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாக்களிக்கச் சென்றவர் சாலை விபத்தில் உயிரிழப்பு : குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 12:15:23 PM (IST)
"சட்டமன்றத் தேர்தலில், வாக்களிப்பதற்காகச் சென்ற போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று எம்பவர் இந்தியா' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் சென்னையில் வசித்து வந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக, தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.
பயணத்தின்போது நாங்குநேரி அருகே சென்றபோது, சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக சாலையோரம் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, அவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரது மனைவியும் மகனும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து 'எம்பவர் இந்தியா' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆ.சங்கர் கூறுகையில், "ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வந்த ஜெயபாலனின் குடும்பம் பெரும் துயரத்தில் உள்ளது. எனவே, தமிழகத் தேர்தல் ஆணையம் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 29, ஏப்ரல் 2026 11:37:36 AM (IST)

விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: சார் ஆட்சியர் ஆஜராகி விளக்கம் - உயர்நீதிமன்றம் விசாரணை
புதன் 29, ஏப்ரல் 2026 11:33:46 AM (IST)

மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
புதன் 29, ஏப்ரல் 2026 10:44:57 AM (IST)

தமிழகத்தில் சிலிண்டர் விநியோகக் காத்திருப்புக் காலம் அதிரடியாகக் குறைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 29, ஏப்ரல் 2026 10:17:53 AM (IST)

விஜய் முதல்வராவார்... 200+ தொகுதிகளில் தவெக வெல்லும் - செங்கோட்டையன் பேட்டி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:44:41 PM (IST)
_1777377317.jpg)
தேர்தல் முடிவுகளுக்குப் பின் காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டுக: சீமான் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:25:41 PM (IST)








