» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!

செவ்வாய் 10, மார்ச் 2026 4:26:06 PM (IST)

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் சிலிண்டர் விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள சிலிண்டர் கையிருப்பு விவரங்களை இன்று பிற்பகலுக்குள் தெரிவிக்க வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. இருப்பினும், வணிக ரீதியிலான சிலிண்டர் தேவை அதிகரித்து வருவதால், தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய மத்திய அரசைத் தமிழக அரசு ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: அமெரிக்கா - ஈரான் போர் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் அங்கு சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நிலவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திற்குத் தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டும். இவ்வாறாக அந்தப் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory