» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தோல்வி பயத்தால் திமுக அரசு ரூ.5000 கொடுத்துள்ளது: ஜெயக்குமார் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:15:17 PM (IST)
குலவிளக்கு திட்டம் மூலம் மகளிருக்கு ரூ.2000 தருவோம் என அதிமுக தந்த தேர்தல் வாக்குறுதியால், திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 உரிமைத்தொகையுடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 பெண்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "வரும் தேர்தலில் திமுக படு தோல்வியடைந்துவிடும் என்பதுதான் களநிலவரமாக உள்ளது. எனவே அரசு கஜானாவை காலி செய்துவிடுவோம் என்ற எண்ணத்தில், போகிற போக்கில் ரூ.5000 கொடுத்துள்ளார்கள். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதை மனதில் வைத்து சந்தர்ப்பவாதத்தோடு இந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
குடும்ப அட்டைகளின் அடிப்படையில் அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1000 வழங்குவோம் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக திமுக அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மேலும், கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல், தேர்தல் முன்பாக தற்போது வழங்குகினார்கள். அதுபோலவே தற்போது இந்தப் பணத்தை வழங்கியுள்ளனர்.
உள்ளங்கை நெல்லிக்கனி போல தங்களின் தோல்வியை உணர்ந்துகொண்ட திமுக, சலுகைகளை வாரி வழங்கியாவது வாக்குகளைப் பெறலாம் என்ற கனவோடு இதுபோல செய்கின்றனர். ஆனால், இது திமுகவுக்கு பகல் கனவாகவே இருக்கும். திமுக இனி ஒரு போதும் கோட்டை பக்கம் வருவதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரிகள் மற்றும் கட்டண உயர்வுகள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திடமும் பெரும் தொகையை திமுக அரசு வசூல் செய்துவிட்டு, பெண்களுக்கு சொற்ப தொகையை வழங்குகின்றனர்.
குலவிளக்கு திட்டம் மூலம் மகளிருக்கு ரூ.2000 தருவோம் என அதிமுக தந்த தேர்தல் வாக்குறுதியால், திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் இதுபோல மகளிருக்கு ரூ.5000 கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என திமுக நினைக்கிறது, அது நடக்காது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசின் கருவூலத்தை காலி செய்துவிட்டுதான் செல்வார்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.2000 தருவதாக சொல்லும் ஸ்டாலின், இப்போது ஆட்சியில் இருக்கும்போதே அந்தத் தொகையை கொடுத்திருக்கலாமே?
அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். கல்விக்கடன் ரத்து, நீட் ரத்து, சிலிண்டர் மானியம் என கடந்த முறை திமுக தந்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவானது” என்றார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடகுக் கடை நடத்தி 300 பவுன் நகை மோசடி: வாலிபர் கைது, பெற்றோர் தலைமறைவு!
வியாழன் 5, மார்ச் 2026 8:32:45 AM (IST)

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை - நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 5, மார்ச் 2026 8:27:59 AM (IST)

நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)

விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச உயர்கல்வி: : தஞ்சையில் விஜய் அதிரடி வாக்குறுதி
புதன் 4, மார்ச் 2026 5:51:53 PM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)









