» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகர் நெப்போலியன் மகன் குறித்து அவதூறு: நெல்லை எஸ்பி அலுவலகத்தில் புகார்!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:50:12 AM (IST)
நடிகர் நெப்போலியன் மகனின் உடல் நிலை குறித்து அவதூறு பரப்பப்படுவதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1991ல் பாரதிராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நெப்போலியன். கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் இவர், தி.மு.க.வில் இணைந்து தேர்தலில் நின்று வெற்றிப்பெற்று எம்பியாக ஜொலித்தார். ஆனால், திடீரென்று, தனது குடும்ப நலனுக்காக அனைத்தையும் ஒதுக்கி விட்டு அமெரிக்கா சென்று செட்டிலாகி விட்டார்.இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், குணால், தனுஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். இதில் தனுஷுக்கு நான்கு வயதாகும்போது தசை சிதைவு நோய் தாக்கியது. இதற்காக சிகிச்சை பெற்று தனுஷ் ஓரளவு குணமடைந்தார். இதற்கிடையில், திருநெல்வேலியை அடுத்து மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்சயாவுக்கும், தனுஷுக்கும் ஜப்பானில் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்நிலையில், தனுஷ் உடல் நிலை குறித்தும், அக்சயா குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பப்படுவதாக நடிகர் நெப்போலியன் தரப்பில் நெல்லை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவில், "தனுஷ் மற்றும் அக்சயா இருவரும் நல்ல உடல் நலத்துடன் சேர்ந்து வாழ்து வரும் நிலையில், அவர்கள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளத்தில் பாஜகவின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:50:14 PM (IST)

நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்க முயற்சி : மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:46:47 PM (IST)

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:14:54 PM (IST)

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)

கேரம் வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
திங்கள் 15, டிசம்பர் 2025 3:12:06 PM (IST)

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)










