» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
செவ்வாய் 11, ஜூன் 2024 5:45:24 PM (IST)
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்றும், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜூன் 14-ம் தேதியும், வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி எனவும் அறிவித்தது.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா திமுக வேட்பாளராக போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின் முடிவில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: தலைமை டி.ஜி.பி.யை நியமிக்க இபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:27:41 AM (IST)

உண்டியலை உடைத்தபோது கருவறையில் இருந்து சத்தம் கேட்டதால் கொள்ளையன் ஓட்டம்!!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:30:20 AM (IST)

கட்சி தொடங்கியவுடன் முதல்-அமைச்சர் ஆகவில்லை: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:28:06 AM (IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:20:41 AM (IST)

மோசடி வழக்கில் சிறிய தொகைக்காக வங்கிக்கணக்கை ஒட்டுமொத்தமாக முடக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:18:45 AM (IST)

ஆசிரியைகளிடம் 160 பவுன், ரூ.31½ லட்சம் நூதன மோசடி: பெண்கள் உள்பட 4 பேர் கைது
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:13:59 AM (IST)








