» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இனி விமான நிலையத்தில் பேட்டி கிடையாது : அண்ணாமலை திட்டவட்டம்!

செவ்வாய் 11, ஜூன் 2024 5:19:38 PM (IST)

இனிமேல் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என்று தமிழக பாஜக கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், இன்று கோவை விமான நிலையத்துக்கு வருகை தந்த அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயற்சித்தனர்.

அப்போது, இனிமேல் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன், பாஜக அலுவலகங்களில் மட்டுமே பேட்டி அளிப்பேன், முறைப்படி 24 மணிநேரத்துக்கு முன்னதாகவே செய்தியாளர்கள் சந்திப்புக்கான தகவல் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory