» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு? தமிழக அரசு விளக்கம்

செவ்வாய் 11, ஜூன் 2024 10:04:48 AM (IST)

தமிழகத்தில் வரும் ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.

அதாவது, ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற உத்தரவினை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ளது

இதன் அடிப்படையில், நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 விழுக்காடு அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளது. இதன்படி மின் கட்டணத்தை உயர்த்தினால் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை மின்சாரக் கட்டணம் உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறது. 2022-ல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவு காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

எனவே, நடப்பு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்கள். ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணத்தையும் உயர்த்தினால் பெரும் பாதிப்பு ஏற்படும் என மக்கள் கவலைப்பட்டனர். இந்த நிலையில், மின் கட்டணம் ஜூலை 1 முதல் உயர இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகியது.

இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தது. இந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் மின் கட்டணம் மீண்டும் உயரப்போகிறது என்று வெளியாகும் தகவலில் உண்மையில்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு  அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory