» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேருந்து நடத்துநர் - காவலர் இடையே சமாதானம்: முடிவுக்கு வந்தது மோதல்!!
சனி 25, மே 2024 4:29:35 PM (IST)

அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த ஆயுதப் படை காவலர் மற்றும் பேருந்து நடத்துநரும் ஒருவருக்கு ஒருவர் பேசி சமாதானம் ஆனதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சில நாள்களுக்கு முன்பு, நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.
வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது, என்று போக்குவரத்து துறை விளக்கம் அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து, சீட் பெல்ட் அணியாதது, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது, அதிக பயணிகளை ஏற்றியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, அரசுப் பேருந்துகளுக்கு பல இடங்களில் தமிழக போலீஸார் அபராதம் விதிக்கத் தொடங்கினர். இதனால், இந்த விவகாரம் சர்ச்சையானது.
இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திரரெட்டியுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.சட்ட ரீதியாக போக்குவரத்து மற்றும் காவல் துறை இடையே நடந்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஓட்டுநரும், காவலரும் பேசி சமாதானம் ஆனதோடு, போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று இருவரும் ஒன்றாக சொல்லி சமாதானம் செய்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்மொழி கொள்கை விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:48:24 PM (IST)

மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)

பா.ஜனதா ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது: நெல்லையில் ப.சிதம்பரம் பேச்சு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:33:34 PM (IST)

ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் சொத்து ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:47:55 AM (IST)

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:39:59 AM (IST)

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)
