» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மருத்துவமனையில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு : தீயணைப்பு வீரர்கள் மீட்பு

வியாழன் 23, மே 2024 7:44:56 PM (IST)



ராதாபுரம் அரசு மருத்துவமனையில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள்  பிடித்தனர் 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ஆண்கள் உள் நோயாளி பிரிவில் பரமேஸ்வரபுரத்தை சேர்ந்த மாசானம் என்பவர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு எதோ ஒன்று ஊர்வதை பார்த்துள்ளார். 

பின்பு ஊற்று நோக்கி பார்த்த போது நல்ல பாம்பு ஒன்று இருந்ததை கண்டு திடுக்கிட்டுள்ளார்.. இது குறித்து மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்கள்  ராதாபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த ராதாபுரம் தீயணைப்பு வீரர்கள் கழிவறையில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை  லாவகமாக பிடித்து கொண்டு சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory