» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவகாசி அருகே 3 குழந்தைகளை கொன்று தாய், தந்தை தற்கொலை!

வியாழன் 23, மே 2024 5:48:36 PM (IST)

சிவகாசி அருகே 3 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று, கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்தவர் லிங்கம். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஆனந்தவள்ளி என்ற மகளும், ஆதித்யா என்ற மகனும் சசிகா என்ற 2 மாத குழந்தையும் உள்ளனர். லிங்கம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், பழனியம்மாள் சிவகாசி அருகே சுக்கிவார்பட்டி பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தனர்.

இன்று(மே 23) காலை வெகு நேரமாகியும் இவர்களின் வீட்டு கதவு திறக்காததால், அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, லிங்கம், அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் 3 குழந்தைகள் இறந்த நிலையில் கிடந்தனர். போலீசார் 5 பேரின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி இருவரும் குழந்தைகளை கொன்று விட்டு, அவர்களும் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவிசாரணைக்கு பின் முழுமையான விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory