» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தின் முதல் பா.ஜனதா எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்

வியாழன் 9, மே 2024 9:15:59 AM (IST)

தமிழகத்தின் முதல் பா.ஜனதா எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடையை அடுத்த கருப்புக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சி.வேலாயுதன் (வயது 73). 1996-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின்போது வேலாயுதன் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்மூலம் தமிழகத்தில் பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் எம்.எல்.ஏ. என்ற பெருமையை இவர் பெற்றார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் கருப்புக்கோட்டில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மறைந்த வேலாயுதனுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். உயிரிழந்த வேலாயுதனின் உடல் நாகர்கோவில் அருகே கருப்புக்கோடு பகுதியில் உள்ள குடும்ப நிலத்தில் இன்று காலை 10 மணி அளவில் தகனம் செய்யப்பட உள்ளது.

வேலாயுதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழகத்தின் முதல் பா.ஜனதா எம்.எல்.ஏ. வேலாயுதனின் மறைவு வேதனை அளிக்கிறது. இவரைப் போன்றவர்கள்தான் தமிழகத்தில் எங்கள் கட்சியைக் கட்டியெழுப்பியவர்கள், நமது வளர்ச்சித் திட்டத்தை மக்களுக்கு விளக்கியவர்கள். ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீது அவர் கொண்டிருந்த அக்கறைக்காகவும் அவர் நினைவுகூரப்படுவார்’ என்று கூறியுள்ளார். இதேபோல் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory