» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

திங்கள் 6, மே 2024 9:55:46 AM (IST)

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகின. 94.56 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம், கைப்பேசி வழியாகவும், பள்ளிகள், தகவல் மையங்கள் வாயிலாகவும் தடையின்றி முடிவுகளை அறிந்து கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை செய்திருந்தது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இன்று தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். அவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஆண்டு தேர்வெழுதியவர்களில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 7.67 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.53 சதவீதம் அதிகமாகும்.

தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். தேர்வெழுதியவர்களில் மாணவிகள் 96.44 சதவீதம் பேரும் மாணவர்கள் 92.37 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், தமிழகத்தில் 2478 பள்ளிகள் நூறு சதவீதம் தேரச்சி பெற்றுள்ளனர். இதில், 397 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி என்ற சாதனையைப் படைத்துள்ளன.



மேலும் பாட வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற விவரங்களும் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ் 35, ஆங்கிலம் 7, இயற்பியல் 633, வேதியியல் 471, உயிரியல் 652, கணிதம் 2,587, தாவரவியல் 90, விலங்கியல் 382, கணினி அறிவியல் 6,996, வணிகவியல் 6,142, கணக்கு பதிவியல் 1,647, பொருளியல் 3,299, கணினி பயன்பாடுகள் 2,251, வணிக கணிதம் 210 மாணவர்கள நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory