» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது‍: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

சனி 4, மே 2024 9:53:35 AM (IST)

கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள அறிவிப்பு போலியானது‍ என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாக சமூக வலைதளங்களில், தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பலரும் பள்ளிக்கல்வித்துறையை தொடர்ந்து விசாரித்தனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இதுபோலியான அறிவிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், 'சமூக வலைதளங்களில் வைரலாகும் கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்புவது தொடர்பான தகவல் முற்றிலும் போலியானது, இதுபோன்ற அறிவிப்பினை நாங்கள் வெளியிடவில்லை. இதுபோன்ற மோசடி நடவடிக்கை தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என்று பள்ளிக் கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory