» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் : தமிழக வீரர் குகேஷூக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திங்கள் 22, ஏப்ரல் 2024 11:53:58 AM (IST)



'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற 17 வயது தமிழக இளம் வீரர் குகேஷூக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடைபெற்றது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, குகேஷ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளிட்ட 8 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் தமிழக வீரர் குகேஷ் (வயது 17) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற, 2வது வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார்.

இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷூக்கு வாழ்த்துகள். வெறும் 17 வயதில், குகேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன் தொடரில் சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory