» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி: வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு எந்திரங்கள் அறைக்கு சீல்!

சனி 20, ஏப்ரல் 2024 5:52:21 PM (IST)தென்காசி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வேட்பாளர்கள் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. 

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான தென்காசி கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.

பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார், தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory