» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள்: ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது!
திங்கள் 26, பிப்ரவரி 2024 4:06:27 PM (IST)

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 368 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட பிற்படுத்தபட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுப்பையா, டாஸ்மார்க் பொதுமேலாளர் சங்கரலிங்கம், அனைத்துதுறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணி பொறுப்பாளர்கள் நியமனம்: விஜய் அறிவிப்பு
வியாழன் 19, ஜூன் 2025 12:53:57 PM (IST)

பல பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டு கூட்டணியில் நீடிக்கிறோம்: திருமாவளவன் பரபரப்பு பேச்சு
வியாழன் 19, ஜூன் 2025 12:26:12 PM (IST)

தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் பா.ஜ.க. அரசு பார்க்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
வியாழன் 19, ஜூன் 2025 11:36:50 AM (IST)

சுங்க கட்டணத்தை ஆண்டுக்கு 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
வியாழன் 19, ஜூன் 2025 11:12:55 AM (IST)

பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை: நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 19, ஜூன் 2025 8:50:50 AM (IST)

பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றவில்லை என்றால்... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
வியாழன் 19, ஜூன் 2025 8:37:31 AM (IST)
