» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டி? சரத்குமார் பதில்

திங்கள் 26, பிப்ரவரி 2024 12:18:40 PM (IST)

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். 

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையில் மூன்று முக்கிய கூட்டணிகள் அமையவுள்ளன. திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த முறை ஒரே அணியாக தேர்தலை சந்தித்த பாஜகவும், அதிமுகவும் தற்போது தனித்தனியாக களமிறங்கியுள்ள நிலையில், தங்களின் கூட்டணிக்கு கட்சிகளை இழுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டுகளில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி, வருகின்ற தேர்தலில் எந்த அணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமக தலைவர் சரத்குமார் பேசியது: "கட்சியின் உயர்நிலைக் குழுவில் ஒருமனதாக முடிவு எட்டப்படவில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதற்கு மக்களவைத் தேர்தல் கூட்டணி முக்கியம். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பாஜக பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. விரைவில் கூட்டணி குறித்தும், தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் தெரிவிக்கப்படும்.” என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory