» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அடுத்த 100 நாட்களுக்கு எங்களை ஜிகே.வாசன் வழிநடத்துவார் : அண்ணாமலை பேட்டி!

திங்கள் 26, பிப்ரவரி 2024 12:09:33 PM (IST)

அடுத்த 100 நாட்களுக்கு எங்களை வழிநடத்தக் கூடிய நபராக ஜிகே.வாசன் இருக்கப் போகிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை சென்னையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். பாஜக-தமாகா இடையே கூட்டணி உறுதியான நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பாஜக கூட்டணியில் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை தமாகா கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்புக்குப் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக அவர்கள் செய்த சாதனையை சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. பாஜக கூட்டணியில் முதல் ஆளாக வந்திருக்கிறார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.அடுத்த 100 நாட்களுக்கு எங்களை வழிநடத்தக் கூடிய நபராக ஜிகே.வாசன் இருக்கப் போகிறார். பிற கூட்டணிகளின் பலவீனம் பற்றி கவலையில்லை. எங்கள் கூட்டணியை வலுப்படுத்துவதே நோக்கம். பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வாங்குகளை கேட்கவுள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து

JAIHINDFeb 26, 2024 - 04:32:01 PM | Posted IP 172.7*****

G.K.வாசன் ஒரு நல்ல மனிதர், பிஜேபி உடன் இணைந்து அதை நிரூபித்துவிட்டார். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory