» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
திங்கள் 26, பிப்ரவரி 2024 8:41:56 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மண்டைகாடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மார்ச் 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை இரணியல் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 19577) தற்காலிகமாக மார்ச் 4, 5, 11 மற்றும் 12-ந்தேதிகளில் இரணியல் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். அதேபோல ஜாம்நகரில் இருந்து நெல்லைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (19578) மார்ச் 3, 4, 10 மற்றும் 11-ந்தேதிகளில் இரணியல் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று வரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.