» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோ-ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் திட்டம் மீண்டும் அறிமுகம்!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 4:02:55 PM (IST)

கோ-ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் நா.ராஜேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் இரண்டு பொருட்களின் விலையில் மூன்று பொருட்களை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். இத்திட்டமானது கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் கண்கவர் வண்ணங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் இடம் பெற்று உள்ளன. 

ஆகவே வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டமானது மார்ச் 25-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory