» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தோவாளை ஆராய்ச்சி மைய வாளகத்தில் அரிய வகை மலர்களை ஆட்சியர் ஆய்வு!
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:06:22 PM (IST)
தோவாளை மலரியல் ஆராய்ச்சி மைய வாளகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரியவகை மலர்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலரியல் ஆராய்ச்சி மைய வளாகத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: குமரி மாவட்டமானது மலைவளம், காட்டுவளம், கடல்வளம், வயல்வளம், நிலவளம், மண்வளம் நிறைந்த மாவட்டமாக திகழ்வதோடு, பேச்சிப்பாறை உள்ளிட்ட பல்வேறு அணைகள், குளங்கள், வாய்கால்கள். அரியவகை பழவகைகள், மருந்துவகைகள் உள்ளிட்டவைகள் நிறைந்த மாவட்டமாக காட்சியளிக்கிறது.
அதனடிப்படையில் மாவட்டத்திற்குட்பட்ட மலர்வகைகள், பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த மலர்களையும் வளர்த்து பராமரிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண் ஆராய்ச்சி மையம் சார்பில் தோவாளை பகுதியில் மலரியல் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டு, அந்த வளாகத்தில் பல்வேறு மலர் வகை தாவரங்களை வளர்த்து பராமரித்து வருகிறார்கள்.
குறிப்பாக இந்த வளாகத்தில் தாமரை, லில்லி. வெட்சி, தும்பை, முல்லை, ஆம்பல், நங்கு, மரா, சேடல், வடவம், வளசு, அதிரல், பிரதிகம், தளவம், பிட்டி, பிரமளவ், பிண்டி,தெற்றி,அரளி, நன்நிடு உள்ளிட்ட பல்வேறு வகையான தாவர வகைகளில் மலர்கள் பராமரிக்கப்பட்டு ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.