» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 58 பேர் மீது நடவடிக்கை!
திங்கள் 18, செப்டம்பர் 2023 12:19:20 PM (IST)
காஞ்சிபுரத்தில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதாக 45 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர் என்று டாஸ்மாக் காஞ்சிபுரம் மாவட்ட வடக்கு மேலாளர் ஷியாம் சுந்தர் கூறினார்.
தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறதா, வெளிநபர்கள் பணிபுரிகின்றனரா என்று சோதனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மேலாளர் ஷியாம்சுந்தர் அதிரடி சோதனை மேற்கொண்டார்.
இதில், தாம்பரம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் உள்ள 11 கடைகளில் பணியாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து 11 விற்பனையாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் ஆலந்தூரில் 1 கடையும், குன்றத்தூரில் 4 கடைகளும், பல்லாவரத்தில் 2 கடைகளும், சோழிங்கநல்லூரில் 4 கடைகளும், பெரும்புதூரில் 1 கடையும், தாம்பரத்தில் 6 கடைகளும் என மொத்தம் 18 கடைகளில் மாவட்ட மேலாளர் எஸ்.பி.சியாம்சுந்தர் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது 18 கடைகளிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தார். உடனடியாக அந்த 18 கடைகளிலும் பணியாற்றி வந்த 18 அரசு டாஸ்மாக் விற்பனையாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பணியாளர்கள் கடைகளுக்கு சம்பந்தமில்லாத வெளிநபர்களை விற்பனை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனரா என்றும் சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையின் போது ஆலந்தூரில் 11 கடைகளிலும், பல்லாவரத்தில் 1 கடையிலும், சோழிங்கநல்லூரில் 1 கடையிலும், தாம்பரத்தில் 4 கடைகளிலும் என மொத்தம் 7 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
இந்த சோதனையில் 7 கடைகளில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு சம்பந்தம் இல்லாமல் வெளிநபர்களை வைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபடுத்தியதற்காக 21 டாஸ்மாக் விற்பனையாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதன்படி 45 விற்பனையாளர்களை தற்காலிக பணி நீக்கமும், 13 விற்பனையாளர்கள் பணியிட மாற்றம் என மொத்தம் 58 விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட மேலாளர் சியாம்சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவர், ஒண்டி வீரன் நினைவிடங்களில் ஆளுநர் மரியாதை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:34:28 PM (IST)

குமரி மாவட்டத்தில் அக்.2ம் தேதி கிராமசபைக் கூட்டம் ஆட்சியர் தகவல்!!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:32:44 PM (IST)

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு : முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 4:09:34 PM (IST)

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: 18 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:21:55 PM (IST)

பாரதத்தின் உந்து சக்தி விவசாயிகள்தான்: குற்றாலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
வியாழன் 28, செப்டம்பர் 2023 8:31:11 PM (IST)

திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:40:59 PM (IST)
