» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராக்கெட் ராஜா மீதான தடுப்பு காவலை நீக்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம் கோரிக்கை!

சனி 25, மார்ச் 2023 4:36:10 PM (IST)

பனங்காட்டுப்படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா மீதான  தடுப்பு காவலை நீக்க வேண்டும் என  தமிழக முதல்வருக்கு திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் காளிதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 6 மாத காலமாக பொய்யாக வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் வாடும் பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர்  ஜெ. ராக்கெட் ராஜாவை காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் தடுப்பு காவலில் வைத்துள்ளார்கள். தனது சமுதாய மக்களுக்கு அரசால் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் சென்றடைய வேண்டும் என்றும், நாடார் சமுதாய மக்கள் அரசியலில் விழிப்புணர்வு அடையவேண்டும் என்ற நல்லநோக்கத்தோடும் பனங்காட்டு படை கட்சி என்பதை ஆரம்பித்து சமுதாய இளைஞர்களிடம் நற்பெயர் பெற்றவர். 

அவர் மீது முன்னதாக பதியப்பட்ட அனைத்து குற்ற வழக்குகளிலும் சட்டப்படி வழக்கை சந்தித்து தான் நிரபராதி என நிரூபித்து வந்துள்ளார். மேலும் குறிப்பாக தென்மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் நாடார் சமுதாய இளைஞர்களின் வாக்குகளை நிர்ணயிக்கக்கூடிய பலம் கொண்டவர். தற்பொழுது ராக்கெட் ராஜா அவர்களை தடுப்பு காவலில் வைத்துள்ளதால் நாடார் சமுதாய மக்களும், இளைஞர்களும் அதிர்ப்தியாக உள்ளனர். 

ஆகவே தமிழக முதல்வர், பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர் ஜெ. ராக்கெட் ராஜாவை தடுப்புக்காவலில் வைத்துள்ளதை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இது சம்பந்தமாக தமிழக சபாநாயகர் அவர்களையும், நாடார் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர் பெருமக்களையும், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்து, ஆவன செய்ய வேண்டும் என சங்க நிர்வாக சபை கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

BabuMar 25, 2023 - 08:20:58 PM | Posted IP 223.2*****

நாடார் குல பாதுகாவலரை நாம் காக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory