» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை..!!

செவ்வாய் 21, மார்ச் 2023 5:04:47 PM (IST)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது. 

ஈரோடு மாநகராட்சி ஆணையரான சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியுடைய தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டவர் சிவக்குமார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது குற்றச்சாட்டாகும். முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெறுகிறது.

இன்று காலை சிவக்குமார் வீட்டில் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வந்தனர். ஆனால் சிவக்குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்ததால் சோதனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து 2 காவலர்களை வீட்டில் காவலுக்காக நிறுத்திவிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் திரும்பி சென்றிருந்தனர். பின்னர் சிவக்குமார் குடும்பத்தினர் வீடு திரும்பினர். இதையடுத்து  ஈரோடு லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் வருவாய்துறையை சேர்ந்த 2 அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory