» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேர விரும்பவில்லை - அண்ணாமலை பேச்சு

சனி 18, மார்ச் 2023 12:33:06 PM (IST)

திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என அண்ணாமலை கூறினார்.

சென்னை அமைந்தகரையில் நடந்த அவசர கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன்.

திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை. பா.ஜ.க.வை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

அவரது பேச்சு குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., "தேர்தல் தொடர்பான முடிவை பேசும் நேரம் இதுவல்ல. தேசிய தலைமை முடிவு எடுக்கும். பா.ஜ.க. உயர்மட்ட குழுவில் இது குறித்து பேச வேண்டும்" என்று கூறினார். இதனிடையே அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தியிருந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சு பா.ஜ.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

அண்ணாமலையார் ரசிகன்Mar 19, 2023 - 04:21:17 PM | Posted IP 162.1*****

உங்களது இந்த அறிவிப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது....தன்மானமுள்ள எந்த ஒரு தமிழனும் திராவிட கட்சிகளை விரும்பமாட்டார். தமிழக மக்கள் இப்போது தெளிவாகிவிட்டார்கள். பிஜேபி க்கு ஆதரவு பெருகுகிறது... வாழ்த்துக்கள்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory