» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை பள்ளிக்கு ஹாலிவுட் நடிகர் ரால்ப் வருகை

சனி 4, பிப்ரவரி 2023 3:22:35 PM (IST)திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிர் மேல்நிலைப் பள்ளியை ஆங்கில நடிகர் ரால்ப் ஆர்லிஸ் பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். 

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரம சிங்கபுரத்தில் இயங்கி வருவது. அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி. இது கத்தோலிக்க அருட் சகோதரிகள் நடத்தி வரும் இந்த பள்ளியை ஆங்கில நடிகர் ரால்ப் ஆர்லிஸ் பார்வையிட்டு மாணவிகளை சந்தித்து பேசினார். நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை அருட் சகோதரி எஸ். அருள் மேரி தலைமை தாங்கினார். உதவித்தலமை ஆசிரியை எஸ். பவுலின் அமுதா முன்னிலை வகித்தார் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இனிகோ வரவேற்புரை நிகழ்த்தினார். 

சிறப்பு விருந்தினராக சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் கலந்து கொண்டு ஆங்கில நடிகர் ரால்பை மாணவிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து பேசினார்.  நடிகர் ரால்ப் பேசும்போது பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான வாழ்க்கையை மாணவிகள் மகிழ்ச்சியுடன் கடப்பதற்கான வழிமுறையை விளக்கினார். மகிழ்ச்சியை அவரவர் தேடிக் கொள்ள வேண்டுமே தவிர காசு கொடுத்து வாங்க அது கடை சரக்கல்ல என்று பேசினார். 

பள்ளிக்கு கலாமின் நண்பர் டாக்டர் விஜி வழங்கிய புத்தகங்களை வெங்காடம்பட்டி நன்னன் வழங்கினார். நூறு பள்ளி நூலகங்கள் அபிவிருத்தி, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு என்ற லட்சியத்துடன் பள்ளி பள்ளியாக செல்கிறோம் என்று மதுரை பாலு, பல் மருத்துவர் ஏகலைவன், பெண் உலகம் சாந்தி, டிரஸ்ட் குழந்தைகள் இல்லம் திருமாறன் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory