» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு: கணவரை கல்லால் அடித்துக் கொன்ற மனைவி!

ஞாயிறு 29, ஜனவரி 2023 9:29:04 AM (IST)

கடையம் அருகே கணவரை அவரது மனைவியே அடித்துக் கொலை செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரம் டி.ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (48), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி திரவியக்கனி (44). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று  வீட்டின் அருகில் பாலசுப்பிரமணியன் பிணமாக கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கடையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர்   தெய்வம், கடையம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாலசுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பாலசுப்பிரமணியனை அவரது மனைவியே அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. 

பாலசுப்பிரமணியனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவும் அவர் குடிபோதையில் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும், திரவியக்கனியை அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திரவியக்கனி அருகில் கிடந்த கல்லால் பாலசுப்பிரமணியன் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. 

இதில் மயங்கிய அவரை வீட்டின் வெளியே போட்டுவிட்டார். இந்த சம்பவத்தில் பாலசுப்பிரமணியன்  இறந்து விட்டார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திரவியக்கனியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory