» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர்!

வியாழன் 26, ஜனவரி 2023 10:38:19 AM (IST)சென்னை கடற்கரைச் சாலையில் நடந்த குடியரசு தினவிழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

சென்னை காமராஜா் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்தப் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு காமராஜா் சாலையில் (கடற்கரைச் சாலை) உழைப்பாளா் சிலை அருகே நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வுக்கு வந்த தமிழக ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, முப்படை அதிகாரிகள், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

மேடைக்கு வந்த ஆளுநர், ராணுவப் படைப் பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினா், சி.ஐ.எஸ்.எப்., சி.ஆா்.பி.எப்., ஆா்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடா் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக் குழு, ஊா்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30-க்கும் மேற்பட்ட படைப்பிரிவினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, அணிவகுப்பு மேடைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்கவுள்ளாா். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலா் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உழைப்பாளா் சிலை பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் பேரவைத் தலைவா், அமைச்சா்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி, வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்பட பல முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory