» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இந்தோனேஷிய பெண்ணை சிறைவைத்த மதபோதகர் குடும்பத்தினர்: நள்ளிரவில் பரபரப்பு!!
புதன் 25, ஜனவரி 2023 4:59:50 PM (IST)

குளச்சல் அருகே இந்தோனேசியா பெண்ணை காதல் திருமணம் செய்த மத போதகருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் பெண்ணை சிறை வைத்ததால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள பருத்தி விளையில் வசிக்கும் 62-வயதான ஒருவர் வீடு வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணமாகாத இவர் தாயாருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்து விட்டார். அதன்பிறகு தனியாக வசித்த அவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் அந்த பெண்ணை காதலிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி இந்தோனேசிய பெண்ணை குமரி மாவட்டம் அழைத்து வந்த அவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவா லயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வயது கடந்த இந்த திரு மணத்திற்கு மத போதகரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றிரவு உணவு வாங்குவதற்காக போதகர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
அந்த நேரம் அவரது உறவினர்கள் இந்தோனேசியா பெண்ணை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்ததோடு வெளியே சென்ற போதகர் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியாத அளவில் கதவுகளையும் பூட்டினர். இதனால் போதகர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மனைவியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தன்னையும் மனைவியையும் காப்பாற்று மாறு போலீஸ் அவசர அழைப்பு எண் 100-க்கு போன் மூலம் புகார் அளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போதகரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போதகரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் நள்ளிரவு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
சுமார் 3 மணி நேரமான பிறகும் மத போதகரின் உறவினர்கள் தங்கள் நிலையில் இருந்து மாறவில்லை. எனவே போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்தனர். இதையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர். அதன்பிறகு போலீசார் போதகரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததோடு, இருதரப்பினரும் குளச்சல் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி கூறினர். மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர்!
வியாழன் 26, ஜனவரி 2023 10:38:19 AM (IST)

தென்காசியில் குடியரசுதின விழா: தேசிய கொடியேற்றிய ஆட்சியர் ஆகாஷ்
வியாழன் 26, ஜனவரி 2023 10:03:53 AM (IST)

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத்துக்கு தீவிர சிகிச்சை!!
புதன் 25, ஜனவரி 2023 4:39:12 PM (IST)

வலிமையான கட்சி என்றால் இடைத்தேர்தலில் தனித்து நிற்க தயாரா? சீமான் கேள்வி
புதன் 25, ஜனவரி 2023 4:26:57 PM (IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: கமல்ஹாசன் அறிவிப்பு
புதன் 25, ஜனவரி 2023 4:06:56 PM (IST)

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை : ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
புதன் 25, ஜனவரி 2023 12:23:08 PM (IST)

இவனுங்கJan 25, 2023 - 06:34:44 PM | Posted IP 162.1*****