» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத்துக்கு தீவிர சிகிச்சை!!

புதன் 25, ஜனவரி 2023 4:39:12 PM (IST)

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

குமரி மாவட்டம் தக்கலை அருகே மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத் (68). பேச்சாளரும் இலக்கியவாதியுமான இவருக்கு நேற்று திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் நாஞ்சில் சம்பத்தை அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது நாஞ்சில் சம்பத் மயக்க நிலையில் காணப்பட்டார்.

இன்று காலை வரை அவருக்கு மயக்கம் தெளியவில்லை. டாக்டர்கள் அவரை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நாஞ்சில் சம்பத்திற்கு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சற்று குறைவாக உள்ளதாகவும் சர்க்கரை நோயின் அளவு அதிகமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் நேற்று அவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்ததைவிட உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஆனால் இன்னும் மயக்க நிலை யிலேயே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

நாஞ்சில் சம்பத் ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கட்சியிலிருந்து விலகி 2012-ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.அங்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்.

தினகரன் அ.ம.மு.க.வை ஆரம்பித்த நிலையில் அதில் அண்ணாவும் திராவிடமும் இல்லை என்று கூறி கட்சியில் சேரவில்லை. பின்னர் அரசியல் இருந்தே விலகுவதாக அறிவித்து விட்ட நாஞ்சில் சம்பத் சமீபகாலமாக தி.மு.க. நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வந்தார். தற்போது இலக்கியம் சார்ந்த மேடை நிகழ்ச்சிகளில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று வருகிறார். மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory