» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வலிமையான கட்சி என்றால் இடைத்தேர்தலில் தனித்து நிற்க தயாரா? சீமான் கேள்வி

புதன் 25, ஜனவரி 2023 4:26:57 PM (IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வருகிற 29-ம் தேதி அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வரும் 29-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும்” என்றார்.

அப்போது திமுக, அதிமுக போன்ற வலிமையான கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அவர்களை வலிமை என்று பேசாதீர்கள். அந்த வார்த்தையைப் பேசாதீர்கள். நான்தான் வலிமை. திமுக தனித்து நிற்குமா? எதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், எதற்கு காங்கிரஸ், எதற்கு மதிமுக, எதற்கு விடுதலை சிறுத்தைகள் இத்தனை கட்சிகள் எதற்கு உங்களுக்கு, தமிழக வாழ்வுரிமை அது இதுவென எல்லோரையும் சேர்த்துவைத்துக் கொண்டு ஏன் நிற்கிறீர்கள். வலிமை என்றால், நான் வலிமையானவன். யார் வருகிறீர்கள் என்று கூற வேண்டும் என்று சொல்லவேண்டும்.

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழருக்கு ஒரு சவாலும் கிடையாது. நான் பேசுவதற்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா என்று பாருங்கள். எனவே அவர்களுக்குத்தான் நான் சவால்" என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து

TRUTHJan 25, 2023 - 05:55:47 PM | Posted IP 162.1*****

Evaan Manusaan. All Parties, Please learn from this Leader

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory