» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: கமல்ஹாசன் அறிவிப்பு

புதன் 25, ஜனவரி 2023 4:06:56 PM (IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்கும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் உயிரிழப்பை தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், மநீம தலைவா் கமல்ஹாசனைச் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தாா். 

அப்போது நிா்வாகிகளுடன் ஆலோசித்து தெரிவிப்பதற்காக கமல்ஹாசன் தெரிவித்திருந்தாா்.இந்த நிலையில், மநீமவின் அவசர நிா்வாகக்குழு-செயற்குழு கூட்டம் ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் புதன்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்கு உதவுவோம். காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறோம். எனது நண்பரும் பெரியாரின் பேரனுமான இளங்கோவனை ஆதரிக்கிறேன். மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், தற்போது கூட்டணி குறித்து சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory