» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆன்லைன் ரம்மி தடை மசோதா: ஆளுநருடன் அமைச்சர் ரகுபதி சந்திப்பு!
வியாழன் 1, டிசம்பர் 2022 12:45:34 PM (IST)
ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார்.
அதில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்றும் இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் ஆளுநர் குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை ஆளுநர் ஆய்வு செய்துவருகிறார்.
இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை ராஜ்பவனில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி கூறியதாவது:- ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஆளுநருக்கு நேரில் விளக்கம் அளித்தோம். ஆளுநர் சில சந்தேகங்கள் கேட்டார். அதற்கு பதிலளித்தோம்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் உறுதி அளித்துள்ளார் என்று கூறினார். மேலும், இதுவரை 21 மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என எந்த கால நிர்ணயமும் கிடையாது. எனவே குறிப்பிட்ட காலத்தை நிர்ணயிக்கும்படி நாம் கேட்க முடியாது என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/vandriverfamily_1721995938.jpg)
குழந்தைகளை காப்பாற்றி உயிர்நீத்த வேன் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி!
வெள்ளி 26, ஜூலை 2024 5:41:45 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/parkingroad_1721992211.jpg)
நடைபாதையா? வாகனம் நிறுத்தும் இடமா? காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வெள்ளி 26, ஜூலை 2024 4:39:34 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/cmstalindubai4344a_1721990668.jpg)
முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி
வெள்ளி 26, ஜூலை 2024 4:14:46 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/edapadipalanisamyeps_1548324568_1721988688.jpg)
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று மனு தாக்கல் : மன்னிப்பு கோரிய இபிஎஸ் தரப்பு!
வெள்ளி 26, ஜூலை 2024 3:42:14 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/court_1544010134_1721988337.jpg)
அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்
வெள்ளி 26, ஜூலை 2024 3:35:41 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/maiyla43i43i_1721974204.jpg)
மத்திய அரசின் விருது பெற்ற ஆட்சியருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 26, ஜூலை 2024 11:39:32 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/vandriv4334i_1721971879.jpg)